வேலணை பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி சதீஸ்வரன் யாழ். மாவட்ட செயகத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, அவர் மீண்டும் வேலணை பிரதேச செயலகத்திற்கு வரவேண்டும் எனத் தெரிவித்து வேலணை பிரதேச மக்கள் நேற்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்காக கடலில் நடந்த பெண், மக்கள் பசி தீர்த்த எமது அம்மா வேண்டும், சமூக சேவையாளர் வேண்டும் என்று எழுதிய பதாதைகளுடன் மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
