இனஅழிப்பிற்கான நீதி விசாரணை வேண்டி யாழில் பாதயாத்திரை போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புறப்படும் இப்பாத யாத்திரை யாழ்ப்பாணம் வரை ஏ-9 வீதி வழியே பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரை போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு நல்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதயாத்திரையில் பொது அமைப்புக்கள், காணாமல் போனோர் பாதுகாவலர்களது அமைப்புக்கள் , தொழிற்சங்கங்களென பல தரப்புக்களும் இணைந்து கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தமது பயணத்தின் போது மக்களிடையே கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.