அருணோதயா கட்டடம் மீது மரம் முறிந்து வீழ்ந்து பாரிய சேதம்

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கல்வி கற்கும் கட்டடத்தின் மீது திங்கட்கிழமை (13) இரவு, மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பிட்ட கட்டடத்தில் இரவு மரம் முறிந்து வீழ்ந்தமையால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கட்டிடத்தின் மீதே வாகை மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது.

கல்லூரியில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக காணப்படும் நிலமையில் தற்போது மரம் முறிந்து வீழ்ந்து கட்டடம் சேதம் அடைந்துள்ளமையால் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (14) வகுப்பறைகளுக்கு வெளியில் மரங்களின் கீழேயே கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உடனடியாக வடமாகாண கல்வித்திணைக்களம் இந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை கருத்திற்கொண்டு புதிய கட்டிடத்தை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts