வடக்கு மாகாணத்துக்கு 4 பொறியியலாளர்கள், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!

இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (12) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 4 பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 39 (1. பொறியியலாளர்கள் – 4, 2. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) – 35
3. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்) – 2,4. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (கட்டட படவரைஞர்) – 2) பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts