13ஆவது திருத்தத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்: சம்பந்தன்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

sambanthan-tna

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கு மைத்திரிபாலசிறிசேனவுக்கும் இடையில் இடம்பெறவிருக்கும் சந்திப்புக்கும் சம்பந்தன் எம்.பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதற்கு தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts