கூட்டமைப்புக்கு எதிராக வழக்குப் பதிய யாழ்.பொலிஸார் நடவடிக்கை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஈ.பி.டி.பியினர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TNA-logo

ஈ.பி.டி.பியினரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில், பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோர் இன்று தமது வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர்.

எனினும் தாம் 8 பேருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர் என்றும், ஏனைய 5 பேரும் வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்கள் ஐவரையும் ஜனவரி 12 ஆம் திகதி வாக்குமூலம் அளித்த பிரசன்னமாகவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதன்பின்னர் தாம் 16 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வர் என்றும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது ஒலிவாங்கியைப் பறிக்க முற்பட்டதைத் தொடர்ந்து,அங்கு மோதலாக உருவெடுத்தது.

அதில் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான சர்வேஸ்வரன் மற்றும் சிவயோகன் ஆகியோர் காயமடைந்திருந்தனர்.

அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்ததாகத் தெரிவித்து, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் அவர்கள் முறைப்பாடு செய்தனர். ஈ.பி.டி.பியினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts