பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர் ஒருவர் அவரது விடுதியிலிருந்து, திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை தெஹியத்தகண்டியை சேர்ந்த என்.ரத்நாயக்க (வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை (23) மீண்டும் பணிக்கு திரும்பியிருந்த நிலையில் திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.

Related Posts