உடுவிலில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

யாழ்.உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று உடுவில் சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன் தெரிவித்தார்.

உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளிகள் வரையில் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாதம் மட்டும் 21 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக, டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதை கருத்திற்கொண்டு இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ மாதுக்கள், கிராமஅலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts