தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மவுண்கார்மேல் வீதி – குருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்ரன்ஜெயரோன் (வயது 31) என்பவரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயுள்ளார்.
கடற்றொழில் செய்யும் இவர் காலை கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார்.
பின்னர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என நேற்று செவ்வாய்க்கிழமை மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.