Ad Widget

மரண தண்டனைத் தீர்ப்புக்கெதிராக இந்திய மீனவர்கள் மேன்முறையீடு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள், தங்களுக்கெதிரான தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அந்த மீனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர் அணில் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் சில மாதங்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படுமென்றும் அதன் பின்னர் அவற்றின் விசாரணைத் தேதிகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை கடற்பகுதியில் ஹெரொயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் மற்றும் மூன்று இலங்கையர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்திருந்தது.

இருந்தாலும், கைதுசெய்யப்படும்போது தாம் இலங்கை கடற்பரப்பினுள் இருக்கவில்லை என்று வாதிடும் இந்திய மீனவர்கள், இக்குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டில் கோரியுள்ளனர்.

Related Posts