யாழ்நகரில் கணக்காய்வு தொடர்பான பயிற்சிப்பட்டறை!

கணக்காய்வு தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்று (07) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

audit

வட மாகாணத்தின் தலைமை உள்ளக கணக்காய்வாளர்கள், உள்ளக கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான இப்பயிற்சிப்பட்டறையில் உள்ளக கணக்காய்வு நுட்பங்கள், விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கே.குசலகுமரன் , யாழ் மாவட்ட செயலக உதவிக் கணக்காளர் நாயகம் தேவஞானம் ஆகியோர் இணைந்திருந்தனர்.

Related Posts