Ad Widget

‘ஐ’ படத்திற்கு ஷாரூக்கான் பாராட்டு….!

ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். அப்போது சில பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஷாரூக்கான் மிகவும் மனம் விட்டுப் பேசினாராம்.

ShahRukh-Khan

சொன்ன நேரத்தில் ஷாரூக் வராமல் போக அதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன் பின் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்திய ஷாரூக்கான் அவர்களிடம் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக பேட்டியளித்திருக்கிறார். அப்போதுதான் ‘ஐ’ படத்தைப் பற்றிய அவரது பாராட்டுக்களையும் சொன்னார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

“ஐ’ படம் மிகவும் ஸ்டைலிஷாகவும், மிகவும் பிரம்மாண்டமாகவும் வியக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலும், சிறந்த விதத்திலும் உள்ளது. ‘ஐ’ படத்தின் டிரைலரை நான் விரும்பி ரசித்தேன்,” எனவும் ஷாரூக் கான் கூறினாராம்.

இயக்குனர் ஷங்கருக்கும், ஷாரூக்கானுக்கும் ‘எந்திரன்’ படத்திற்கு முன்பாக மோதல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் சொன்ன ‘ரோபோ’ கதையைத்தான் ஷாரூக்கான் உல்டா செய்து ‘ரா-ஒன்’ என்று படமாக்கினார் என்றும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

‘எந்திரன்’ படத்தை தமிழில் எடுப்பதற்கு முன்னால், அந்தக் கதையை ஷாரூக்கிடமும் ஷங்கர் சொல்லியிருந்தார். கடைசியில் இருவருக்குமிடையே பிரச்னை எழ, அதன் பின்தான் அந்தக் கதையை ‘எந்திரன்’ ஆக ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கினார்.

ஷங்கரின் திறமை என்ன என்பதை நன்கறிந்த ஷாரூக்கான் அவரைப் பாராட்டியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Related Posts