Ad Widget

ஆலயங்களில் மிருகபலியை தடுக்க கைதடியில் உண்ணாவிரதம்

தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kaithadi 111

கைதடிச் சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எழுதுமட்டுவாள், மிருசுவில், வரணி, மந்துவில், மட்டுவில், நுணாவில், கைதடி கிழக்கு, கைதடி வடக்கு, கைதடி மேற்கு பிரதேசங்களில் உள்ள சில சைவத் திருக்கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழமையை கைவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலிக்குத் தடைச் சட்டம் கொண்டுவருமாறு கோரி கையெழுத்தியக்கத்தைத் தொடருகின்றனர் என்றும், யாழ்ப்பாணத்தில் இதுவரை 3000 பேர் இவ்விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் 10,000 கையெழுத்துக்களைத் திரட்டி அரசிடம் கொடுக்க உள்ள என்றும் அறவழிப்போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். –

Related Posts