Ad Widget

பளை வாசிக்கு எதிராக ரி.ஐ.டி யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல்

சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என செல்வபுரம் பளையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பார்த்தீபன் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜயர்ப்படுத்தப்பட்டு 90 நாட்களை விசாரணைக்காக தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும் சந்தேக நபர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடவில்லை என விசாரணையில் தெரியவந்ததையடுத்து நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பி. சிவகுமார் முன்னிலையில் ஆஜயர்ப்படுத்தப்பட்டார்.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் பயங்கரவாத செயற்பாடு அல்ல என்பதால் சாதாரண குற்றங்களுக்கு வழங்கும் தண்டனை போல செம்ரெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts