சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான றொட்டியாலடி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள காணியில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளியேறினர். இதனை இராணுவ தரப்பு உறுதி செய்தது.
மேற்படி காணியானது, சுன்னாகம் பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதி மற்றும் பொலிஸ் விடுதி என்பன நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகும்.
இந்நிலையில், ஊரெழு பகுதியில் தனியார் வீடுகளில் இருந்த இராணுவத்தினர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவற்றை உரிமையாளர்களிடம் கையளித்துவிட்டு, மேற்படி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான காணியில் இராணுவ முகாமை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை (25) இரவு பொலிஸ் நிலையக் காணியில் இருந்த இராணு முகாம் அகற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினரும் வெளியேறியுள்ளனர்.