Ad Widget

வயாவிளான் குட்டியபுலம் மக்களைச் சந்தித்தார் அங்கஜன்

போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வயாவிளான் குட்டியபுலம் மக்கள் நேற்றைய தினம் 24.08.2014 வட மாகாகண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் தெரிவித்ததுடன். தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வட மாகாகண சபை உறுப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

vasavilan-1

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வயாவிளான் குட்டியபுலம் பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. விவசாயப் பிரதேசமாகக் காணப்படும் இப்பிரதேசம் போக்குவரத்து வசதிகளற்ற கிராமமாக காணப்படுகின்றது.

பலாலி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இப் பிரதேசம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பயணம் செய்யவேண்டுமானால் கிழக்கே பருத்தித்துறை வீதிக்கோ அன்றி மேற்கே பலாலி வீதிக்கோ வரவேண்டும். இந்த வீதிகள் இரண்டும் சுமார் நான்கு, ஐந்த கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

vasavilan-2

இலங்கை போக்குவரத்து சபையோ அன்றி தனியார் மினிபஸ் சங்கத்தினரோ நாளாந்தம் மூன்று சேவைகளை காலை, மதியம் பிற்பகல் நடத்தினால் கூட பெரும் நன்மையாக இருக்கும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர் . இதனால் தாம் பெருமளவு பாதிப்புக்குள்ளவதாகவும் தெரிவித்த அவா்கள் அத்துடன் அங்குள்ள மக்களின் வாழ்வதார மேம்பட்டிற்காக ஏதேனும் உதவி செய்து கொள்ளும் படியும் கேட்டு கொண்டனார்.

இதற்கு பதில் அளித்த வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

ஒருபிரதேசத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றும் ஒரு விடயமாக போக்குவரத்து காணப்படுகின்றது. போக்குவரத்து இடையுறாக அமையுமாயின் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதை நான் நன்குணர்வேன்.

vasavilan-3

அத்துடன் இப்பிரதேசம் விவசாய பிரதேசம் இங்கு பெறப்படும் விளைச்சலை சந்தைப்படுத்துவதற்கு உங்களுக்கு போக்குவரத்து சிறப்பாக அமைவது இன்றிமை அமையாததொன்றாகும். நாம் இது தொடர்பாக போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதாகவும், மிக விரைவில் அப்பிரச்சனை தீர்வு பெறும் என தெரிவித்ததுடன் அப்பிரதேச வாழ்வதார மேம்பாட்டினை விருத்தி செய்யும் நோக்கோடு வாழ்வதார உதவியாக சுயதொழிலான ( கோழிவளர்ப்பு,ஆடு மாடு வளர்ப்பு) போன்ற சிலவற்றை மிகவும் வறிய 10 குடும்பங்களுக்கு ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்தார்.

Related Posts