Ad Widget

நாவற்குழி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் அங்கஜன்

நாவற்குழி பகுதியின் நிரந்தர காணியில்லாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று மாலை 22.08.2014 வெள்ளிக்கிழமை நாவற்குழி ஜயனார் கோவிலடி பகுதி பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

unnamed

இதில் வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனை தொட்பில் கேட்டறிந்து கொண்டார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ஐயனார் கோவில் பகுதியில் 29 ஏக்கரில் 44 குடும்பங்களைச் சேர்ந்தோரும் நிரந்தர வீடுகளும் இல்லாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதன்பிரகாரம் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் அப்பகுதிக்கு விஜயம் செய்த வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

unnamed (1)

இதனடிப்படையில் மக்களது தேவைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை ஏற்கெனவே தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அதை மேற்கொள்வதற்கு தமக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்த அவா் மேலும் அங்கு மக்களுக்கு தேவையான மலசலகூடங்களின் தேவைகளின் தேவைகள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையினை கேட்டறிந்ததுடன் தாம் தற்சமயம் 3 பொது மலசலகூடங்களை அமைத்து தருவதுடன் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனையை நீக்கும் பொருட்டு 4 ஆழ் துளாய் கிணறு அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார். மேலும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக மக்கள் தெரிவிக்கும் போது தாம் ஏற்கனவே குறித்த பிரதேசத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான கூரை தகரங்கள் வழங்கியதாகவும் எனினும் மேலும் தாம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

இதனிடையே மக்கள் எதிர்நோக்கிவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தமது கவனத்திற்குக் தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார். நேற்றைய தினம் குடாநாட்டில் கடும் மழைக்கு மத்தியிலும் மக்களின் அழைப்பின் பேரில் நேரடியாக சென்று அவா்களது பிரச்சனையை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts