முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூவர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே அவர் மீது இன்றிரவு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யபட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செயலாளர் நாயகம் விஜயகாந் தலைமையிலான முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்புடைய செய்தி