தொண்டமனாறு மயிலணிப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் ரமணன் (வயது 26) என்பவர் மீது நேற்று இரவு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேற்படி இவரது வீட்டுக்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த இவர் முதலில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.