யாழ்.பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்தலையீடுகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன, என்று குற்றஞ்சாட்டுகின்றது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது
‘கல்விசார்,கல்விசாரா ஊழியர்களின் தெரிவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் பல துறைகளிலும் பிரிவுகளிலும் பரவலான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் இந்த உபகுழு
கண்டறிந்துள்ளது.
அனைத்து மட்டங்களிலும் காணப்படும் அரசியல் செல்வாக்கும், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் கேள்வி
கேட்க துணியாத மனப்பாங்குமே இந்த துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. என அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.