சாவகச்சேரி டச் வீதியில் பகல் வேளைகளில் இனம் தெரியாத இளைஞர்கள் கொட்டன்களுடன் நடமாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக இனம்தெரியாத இளைஞர்கள் சிலர் தடி தண்டுகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சிலர் அவர்களிடம் யார் நீங்கள் என வினாவிய போது தாங்கள் பொலிஸார் என தெரிவித்துள்ளனர்.
சிவில் உடையில் இருந்த இவர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த போது சிவில் உடையில் பொலிஸார் கடமையில் இல்லை என தெரிவித்தனர்.
இருப்பினும் பொலிஸாருக்கு தெரிவித்த சில நிமிடங்களில் குறித்த இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.