உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்தது.
யாழ்.மாவட்ட படையினரும் பொலிஸாரும் மற்றும் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களும் இணைந்து இந்த சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காலையில் ஆரம்பமான சைக்கிள் ஊர்வலம் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்தது. ஊர்வலத்தை காலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கண்டுகளித்தனர்.
