கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை விஸ்தரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் பணிகள் காரணமாக தாமதமடைந்திருந்ததாகவும் விரைவில் பணிகள் பூர்த்தியடைந்து யாழிற்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஜி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது பூர்த்தியடையாமல் காணப்படுவதால், சாவகச்சேரிவரை ரயில் சேவைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வருட இறுதிக்குள் யாழ். வரை ரயில் சேவைகள் இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.