இலங்கையின் முன்னணி டிஜிட்டல் தொழிநுட்ப நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT-MOBITEL) நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் (Marketing Officers) பதவிகளுக்காகத் தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வகிக்கும் பொறுப்புகள்:
-
வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் அவர்களுடனான தொடர்புகளை பேணுதல்.
-
பிராண்ட் சந்தைப்படுத்தல், பிரச்சாரத் திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுத்தல்.
-
சந்தைப் போக்குகளை ஆராய்ந்து புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மேம்பாட்டிற்குப் பங்களித்தல்.
கல்வி மற்றும் ஏனைய தகுதிகள்:
-
கல்வித் தகுதி:
-
G.C.E. (O/L) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 4 திறமைச் சித்திகளுடன் (Credit passes) மொத்தம் 06 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
-
G.C.E. (A/L) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
-
-
தொழில்முறைத் தகுதி:
-
SLIM (Graduate Diploma Level), CIM Part II அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் NVQ-6 / SLQF 4 அல்லது அதற்கு இணையான சந்தைப்படுத்தல் (Marketing) சான்றிதழ்/டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
-
-
அனுபவம் மற்றும் திறன்:
-
சந்தைப்படுத்தல் அல்லது கணக்கு மேலாண்மை (Account Management) துறையில் குறைந்தபட்சம் 01 வருட பணி அனுபவம் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்.
-
சிறந்த மனிதத்தொடர்புத் திறன் மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
வயது எல்லை மற்றும் இதர நிபந்தனைகள்:
-
வயது எல்லை: விண்ணப்பங்கள் முடிவடையும் திகதியில் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
-
பணித்தன்மை: 1 வருட தகுதிகாண் காலத்திற்கு உட்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
-
சம்பளம்: துறையின் தரத்திற்கு இணையான சிறந்த சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஓன்லைன் (Online) மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் (தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
ஆர்வமும் தகுதியும் உள்ள வேட்பாளர்கள் விளம்பரம் வெளியான 14 நாட்களுக்குள் தங்களது சுயவிபரக் கோவை (CV), பிறப்புச் சான்றிதழ், கல்வி மற்றும் தொழில்முறைச் சான்றிதழ்களின் ஸ்கேன் பிரதிகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
-
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://careers.slt.lk/ அல்லது www.sltmobitel.lk என்ற இணையத்தளத்தின் ‘Careers’ பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.