அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டிகள்: வடக்கு மாகாணம் முதலிடம் பிடித்து சாதனை!

இலங்கை தமிழ்த்தினப் போட்டிகளில் 2025 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் வடக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று தொடர்ச்சியாக சாதனை படைத்துள்ளது.

2025ஆம் ஆண்டு 44 போட்டிகளில் பங்கேற்று 18 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 31 பதக்கங்களையும், 2026ஆம் ஆண்டு 50 போட்டிகளில் பங்கேற்று 26 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 7 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 43 பதக்கங்களையும் வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணம் பெற்ற மொத்த 31 பதக்கங்கள், பங்கேற்ற போட்டிகளின் 70.4 சதவீதமாகவும், 2026ஆம் ஆண்டில் பெற்ற 43 பதக்கங்கள் 86 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன. இதனுடன், தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையும் 2025ஆம் ஆண்டில் 18 ஆக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் 26 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் போட்டிகளின் எண்ணிக்கை 44 இலிருந்து 50 ஆக அதிகரித்துள்ளதுடன், தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், வெண்கலப்பதக்கம் மற்றும் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

இவ்வெற்றி, வடக்கு மாகாண மாணவர்களின் தமிழ்மொழித் திறனிலும், போட்டிகளில் அவர்களைத் தயார்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது.

Related Posts