2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தகுதியான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கும், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் வசதியாக இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுகிறது.
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, விடைத்தாள்களை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் 2026 செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை ஒன்லைன் (Online) ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு, பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஒன்லைன் பரீட்சை இணையத்தளத்திற்குச் சென்று (onlineexams.gov.lk), அதிலுள்ள ‘SCHOOL LOGIN’ பகுதி ஊடாகப் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி உள்நுழைந்து சமர்ப்பிக்கப்பட வேண்டுமென, பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.