2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இம் முறை நாடு முழுவதும் 2723 பரீட்சை மையங்களில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இப் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது