தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் இடிப்பு!!

தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது.

வல்லலை – அராலி வீதியில் அமைந்துள்ள தென்னிந்தியத் திருச்சபை இடுகாட்டில் (தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு இந்நினைவுத் தூபி மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது.

தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த நினைவுத் தூபியே மர்ம நபர்களால் திட்டமிட்டு இடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts