செம்மணி வீதியை தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!!

யாழ். நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளில் ஒன்றான செம்மணி வீதியில் காணப்படும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றுவதுடன், வீதியோரங்களில் வளர்ந்துள்ள சிறு புற்கள் மற்றும் தேவையற்ற தாவரங்களை அகற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை நல்லூர் பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செம்மணி வீதிப் பகுதியில் காணப்பட்ட பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு, குறித்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது அந்தத் தூய்மையை தொடர்ச்சியாகப் பேணும் நோக்கிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ். நகருக்குள் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மையான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, செம்மணி வீதியின் எந்தப் பகுதி நல்லூர் பிரதேச சபைக்குரியது, எந்தப் பகுதி யாழ்ப்பாண மாநகர சபைக்குரியது, எந்தப் பகுதி கோப்பாய் பிரதேச சபைக்குரியது எனப் பிரித்துப் பார்க்காமல், குறித்த மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் நல்லூர் பிரதேச சபையினால் இத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை மக்களால் பாரட்டப்படுகின்றது.

Related Posts