இயக்கச்சியில் வீதி விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த ‘ஹையேஸ்’ ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.

சாவடைந்தவர் கிளிநொச்சி பளையை சேர்ந்த 49வயதுடைய சந்திரன் சசிகலா ஆவார். இவர் 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களில் பணியாரறியுள்ளார்.

குறித்த விபத்து மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே இடத்தில் இரு வாரங்களுக்கு முன் ஆண்டு ஏழில் கல்வி பயின்ற மாணவி ஒருவரும் விபத்தில் மறைந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.

Related Posts