தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்து இன்று (30) ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.