தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவை தவறாகப் பார்க்க வேண்டாம்!!

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவை சில தரப்பினர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுடன் போலியான விடயங்கள் பல கோணங்களில் முன்னெடுப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சபையில் பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27-2ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை சைபர் குற்றமாகும் என அரசாங்க நிதி தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கியும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

வெளிநாட்டு கடன் முகாமைத்துவ திணைக்களம் புதிதாக நியமிக்கப்பட்ட காலப்பகுதியின் போது பணிக்குழாமினர் இலங்கை மத்திய வங்கியில் பயிற்சியில் இருந்துள்ளார்கள்.

இக்காலப்பகுதியிலேயே அந்த மோசடி இடம்பெற்றுள்ளது. இது வெளிநாட்டுக் கடன் வளங்கள் திணைக்களத்தின் குறைபாடு என்று குறிப்பிட முடியாது.

இந்த சைபர் மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது.

இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்டவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts