முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஜப்பானின் ‘டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் உருவாக்கிய ‘QDENGA’ என்ற டெங்கு தடுப்பூசிக்குச் சந்தை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கான இந்த சந்தை அனுமதி இந்தியாவிலுள்ள தகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் ஒரே மாதிரியாக இந்தத் தடுப்பூசியை வழங்க முடியும். தடுப்பூசி போடுவதற்கு முன் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெங்குவை உண்டாக்கும் 4 வகையான சீரோடைப் வைரஸ்களுக்கு எதிராகவும் இந்தத் தடுப்பூசி உடலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. தோல் அடியில் 0.5 மிலி வீதம், 3 மாத இடைவெளியில் 2 அளவுகளாக இத்தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சர்வ தச அளவில் 28,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட 19 சோதனைகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7 ஆண்டுகால ஆய்வுகளின்படி, டெங்குவால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதை இத்தடுப்பூசி பெருமளவில் தடுக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரச்சான்றைப் பெற்றுள்ள இத்தடுப்பூசி, ஏற்கனவே பிரேசில், ஆர்ஜன்டீனா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது.

சர்வதேச அளவில் பதிவாகும் மொத்த டெங்கு பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகிறது. எனவே, இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவது இந்தியாவின் பொதுச் சுகாதாரத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.Geographic Refer

Related Posts