தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கவனத்திற்கு!!

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரதியைப் பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆசிரியர்கள் நேரடியாக கல்வியமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கல்வியமைச்சு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

Related Posts