குளித்தலை அருகே இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடத்த முயன்றதாக கிருஷ்ணராயபுரம் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புகார் அளிக்கப்பட்டும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தனது கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலில் தனது கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.