கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் (ATI – Jaffna) 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்கியல் (HNDA), முகாமைத்துவம் (HNDM), ஆங்கிலம் (HNDE), தகவல் தொழில்நுட்பம் (HNDIT) மற்றும் பொறியியல் சார்ந்த (Civil, Electrical, Quantity Surveying) உயர் தேசிய டிப்ளோமா (HND) கற்கைநெறிகளுக்கு முழுநேர மற்றும் பகுதிநேர அடிப்படையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இக்கற்கைநெறிகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புகளைத் தொடரவும், சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதுடன், HNDA கற்கைநெறியானது BCom பொதுப் பட்டத்திற்கு நிகராக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் apply.sliate.ac.lk என்ற இணையத்தளம் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமான 1,000 ரூபாயை மக்கள் வங்கியின் டெஹிவளைக் கிளையிலுள்ள SLIATE கணக்கில் (இலக்கம்: 019100203397613) வைப்புச் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கட்டணப் பற்றுச்சீட்டையும் இணைத்துப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் இருப்பின் நிறுவனத்திற்கு நேரில் சென்று உதவி பெற முடியும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 03.08.2026 ஆகும்.
