இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.
மயிலிட்டி பகுதியில் நேற்றையதினம் (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.