கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை அரசியலாக்க வேண்டாம்!!

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது. ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார் என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு ஏற்று, வடமாகாண மீனவ சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

இது தொடர்பில் நாங்கள் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்களை வெளியிட்டோம், அத்துடன் இந்தியா சென்று வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கு என்ன பேசினார்கள் என்ற விடயம் கூடி இதுவரை பேசப்படாத நிலையில், தற்பொழுது எங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் குழு தமிழகம் சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசி இருந்த என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பில் அவர் சொல்லவில்லை, குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு மீனவ அமைப்புகள் கலந்துரையாடலில் வருகை தந்து தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு பேசப்பட்ட, இந்திய இலங்கை மீனவர் தொடர்பான பேச்சு வார்த்தை, எட்டப்பட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள், இங்கே பலரினால் முன்வைக்கப்பட்டது. தொடர்பாக பேசப்பட்டது அந்த இழப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் இப்பொழுது தற்சமயம் ஒரு கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறி இருந்தார் எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில், கவன ஈர்ப்பு மாதிரி ஒன்றை பாராளுமன்றத்தில் செய்து அரசாங்கத்திடமிருந்து அது தொடர்பில் மீனவர்களுக்கு ஏதாவது மானியங்கள் கிடைக்குமா என்பது தொடர்பில்தான் கேட்டுக் கொள்வதாக கூறி இருந்தார் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா,

கச்சதீவை யாத்திரை தலமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

Related Posts