காங்கேசன்துறை பகுதியில் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவான் பகுதியில், ஒருவர் தாக்கப்பட்டு, காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், திங்கட்கிழமை (24) காங்கேசன்துறை – கீரிமலை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.