2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து ராக்கதன், மேதகு 2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களிடையே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
					




 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							