நெடுந்தீவுக்கு உலங்குவானூர்தியில் வந்த சுற்றுலா பயணிகள்!!

உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் (4) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் உலங்கு வானூர்தியில் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவின் சுற்றுலாத் துறையின் இது முதன்மையாக ஒரு சிறந்த முன்னேற்ற படிக்கல்லாக இவ் வருகை அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts