இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார்.
இலங்கையில் முதன்முதலாக கனேடிய அமைப்பொன்று இந்த போட்டியை மூன்று மாதங்களாக நடத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள் நாடளாவிய ரீதியில் இருந்து கலந்துகொண்டனர்.
மேலும் பட்டம் வென்ற இவருக்கு சுமார் 350,000 ரூபா பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.