தமிழர்களுக்கான அநீதி இரண்டு அணிகள் சார்ந்தவர்களாலும் இழைக்கப்பட்டிருப்பதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான அநியாயங்கள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்தார்.
இதன் விளைவாகத்தான் தமிழர்களின் போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்ததாக சுட்டிக்காட்டிய அவர், மஹிந்தவின் ஆட்சியில் இந்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டோம் என எண்ணி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ் கட்சிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சியும் தெரிவித்திருப்பது அநியாயத்தின் உச்சக்கட்டமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.