சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒருவாரத்துக்கு நீடிக்கும்

அண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பாலான திரவ வாயு சவுதி அரேபியாவிலிருந்து வருகிறது, ஆனால் சமீபத்தில் சவுதி எண்ணெய் வசதிகள் மீது ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி தாமதமானது.

ஒக்டோபர் 4 ம் திகதி நள்ளிரவில் 12.5 கிலோ சிலிண்டர் உள்நாட்டு எரிவாயு விலை 240 ரூபாவால் குறைக்கப்பட்டது.

விலைக் குறைப்பு மக்கள் தங்கள் அன்றாட வீட்டு நடவடிக்கைகளுக்கு அதிக எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது” என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரி கூறினார்.

Related Posts