சுற்றுலா மையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை: முதலமைச்சர்

வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைச் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரைப் பகுதியில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ யினை... Read more »

‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ : மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு... Read more »

யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை : சுரேஸ்

யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் நடத்திய மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த... Read more »

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன!: கருணா

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில்... Read more »

வடக்கும் கிழக்கும் இணைந்தாலேதமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்

“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும்... Read more »

தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்

தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று... Read more »

நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி – கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம்... Read more »

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது : ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும்,... Read more »

இழந்த அதிகாரங்களை பெறுவதற்கு சுயநலவாதிகள் சதி: சம்பந்தன் குற்றச்சாட்டு

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை... Read more »

எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே... Read more »

என்ன பேச வேண்டும் என்று கூட மாவை சேனாதிராஜாவுக்கு தெரியவில்லை

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய... Read more »

திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை

நேற்று , 24/04/17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை.. தமிழர்களின் வரலாற்றுரீதியான தாயக நிலத்தின் தலைமை நகரமானதும், இந்த இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியற்... Read more »

உயிர்களை துன்புறுத்துமாறு மதங்கள் சொல்லவில்லை : வட மாகாண முதலமைச்சர்

“சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய்,... Read more »

காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற... Read more »

சைட்டம் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு : ஜனாதிபதி

சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக்கல்லூரியான சைட்டம் (South Asian Institute of Technology and Medicine ) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக நிர்வாக சபையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தனிநபர் உரிமையிலிருந்து இதனை விடுவிப்பது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின்... Read more »

மதுப்பாவனையைக் குறைத்துள்ள நல்லாட்சி: ஜனாதிபதி பெருமிதம்

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில்... Read more »

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும்

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும் இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரால் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட... Read more »

2017 இற்குள் உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படும் : ஜனாதிபதி

தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தலை இவ்வாண்டுக்குள் நடத்த முடியும் என தாம் உறுதியாக நம்புவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொகுதிகளுக்கான எல்லைகள் உரிய முறையில் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்கு காரணம் எனவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... Read more »

கடைசி ஆசையைக் கூறியதால் கண்களை பிடுங்கினர்

இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று... Read more »

இலங்கை இளைஞர்களின் இளமைக்காலம் பேஸ்புக்கில் கரைகிறது!

“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்”... Read more »