. Editor – Page 2 – Jaffna Journal

ஊடகவியலாளர் தயாபரன் தாக்குதலுக்கு உள்ளானாரா? விசாரணைக்கு உத்தரவிட்டார் வடக்கு ஆளுநர்

ஊடகவியலாளர் இ.தயாபரன் விபத்தில் காயமடைந்தாரா அல்லது அவர் மீது தாக்குதல் இடம்பெற்றதா என்பது தொடர்பாக உடனடி விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஊடகவியலாளர் தயாபரனை வடக்கு மாகாண ஆளுநர் நேற்று இரவு... Read more »

யாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி தென்னைகளில் தீ

மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன்,... Read more »

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர் – வரதராஜப்பெருமாள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். அத்தோடு அவர் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று... Read more »

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன. இதன்போது,... Read more »

முகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு like!!: முன்னாள் போராளியிடம் விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே கடந்த வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.... Read more »

சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!!

இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில்... Read more »

பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்!!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த... Read more »

வெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்!

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி... Read more »

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது. இந்த... Read more »

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த... Read more »

மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்

மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு... Read more »

தொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம்... Read more »

வெட்டுக்காயங்களுடன் உதவிகோரி ஓடிய இளைஞன்!!! உதவ மறுத்த மக்கள்!!!

காதல் விவகாரத்தால திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுசன் (21) என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். யுவதி ஒருவரை டானியல் என்ற இளைஞன் முன்னர் காதலித்ததாகவும், தற்போது அந்த யுவதியை கொல்லப்பட்ட தனுசன் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. காதலி ஏமாற்றிய கோபத்தில், தனுசனுடன்,... Read more »

விசேட வைத்திய நிபுணர்களுக்கு புதிய சட்டம்

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுடன் குறைந்தபட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்... Read more »

தமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி அழைப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்... Read more »

யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை பதினையாயிரம் ரூபாயினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

யாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின்... Read more »

இமானுவேல் ஆனல்ட்,கே.சயந்தன் மற்றும் பலரது பொலிஸ் பாதுகாப்பு கோரிக்கை நிராகரிப்பு!!

யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல்... Read more »

பாடசாலை மாணவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில்!!

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துககு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. வரணி இயற்றாளையில் கடந்த... Read more »