பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது. பிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, விமான ஓடுபாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளது. போர்க்காலத்தில் இராணுவத்...

யாழில் உயிர்கொல்லும் விஷச் சாராம் 372 பரல்கள் பிடிபட்டது!!

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை அமிலம் 372 எண்ணை பரல்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 21 லீட்டர் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளில் அது மரக்கறி எண்ணெய் போன்று கடத்தப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 7812 லீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விசேட அதிரடி படையினர் சுன்னாகம் பகுதியில் பாரவூர்தி...
Ad Widget

வீதிப்போக்குவரத்தை மீறும் சாரதிகளின் அபராதத் தொகையை அதிகரிக்க திட்டம் – அர்ஜுன ரணதுங்க

வீதிப் போக்குவரத்தின் போது விதிகளை மீறிச் செயற்படும், தவறிழைக்கும் சாரதிகள் மீதான அபராதத்தை அதிகரிக்கப் போவதாகவும், மோசமாகத் தவறிழைப்போரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வீதிப் போக்குவரத்தின் போது கண்மூடித்தனமாகச் செயற்பட்டு போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால்...

உயர் கல்வி மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி!

உயர் கல்விக்காக அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர்ந்தபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் மாணவ கடன் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்திமா ஜானகி மாணவர்களை கேட்டுள்ளார். மனித மூலதன ஒதுக்கத்தை ஏற்படுத்துவது இதன்பிரதான நோக்கம் என்று அவர் கூறினார். சந்தையில் கேள்வியுடையபட்டதாரிகளை உருவாக்குவது இதன் இலக்காகும். ஐந்து துறைகளில்...

அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக டக்ளஸ் ஏன் கேள்வி எழுப்பவில்லை? – தலதா அத்துகோரள

தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பவில்லையென நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, அங்குனுகொலபெலஸ்ஸ விவகாரம் தொடர்பில் இரண்டு ஆணைக்குழுக்களினுாடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில், நேற்று (புதன்கிழமை)உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு, 01. பதுளை மாவட்டம் – நிமல் சிறிபால டி சில்வா 02. கண்டி மாவட்டம் – எஸ்.பி.திசாநாயக்க 03....

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிரதான கட்சிகளுக்கு அக்கறையில்லை: கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார பிரிவின் தெற்காசியத் திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் திங்கட்கிழமை கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துள்ளார். இதன்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாக இந்த விடயத்தை எடுத்து...

இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: அமைச்சர் மனோ

புகழ்பெற்ற இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கநேற்று (புதன்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சொந்தமான இதுவரை கையளிக்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின்...

71 ஆவது சுதந்திரதினம் தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் இதனை...

தொடரும் குளிரான காலநிலை – மக்கள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதாகவும்,...

இரணைமடுக்குளத்தின் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக்குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே உள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி விவசாயிகள் வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறித்த விடயத்தைக் கூறினார்....

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

“நாடு எதிர்கொண்டுள்ள பெரிய பிரச்சனையான, இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் அரசியலுக்குள் நுழைந்தேன். அந்த முயற்சி வெற்றியளித்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, என்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுப்பேன்“ என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான...

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு உடன் தீர்வு -ஆளுநர் நடவடிக்கை

வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்ய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அனைத்து துறை அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த அவர், உடனடித் தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், கைதடியிலுள்ள முதலமைச்சரின்...

விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்கள் பிரித்தானியாவில் அழிக்கப்பட்டன!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்களை பிரித்தானியா அரசாங்கம் அழித்துள்ளதாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான 372 ஆவணங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் மோர்னிங் ஸ்டார் என்னும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டதாக குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த செயற்பாட்டுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது....

முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறை!

அநுராதபுரம் வில்பத்து பிராந்திய கஜபா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உள்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சூரியகாந்தன்...

நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே?

கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில்...

வட.மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆரயப்பட்டன. இம்மாவட்டங்களில் 2009ஆம்...

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்!

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக் குறிக்கும் சிற்பங்கள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன. எனினும் குறித்த காணிகள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று காலையே...

தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்: வேலாயுதபிள்ளை

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய நிலங்களை பெரும்பான்மையினத்தவருக்கு தாரைவாா்க்க சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’ அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்து கருத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையத்தில்...

யாழ் மாநகர முதல்வருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு!!

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த வாரம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே குறித்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ். மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பசுமை மாநகரை உருவாக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts