- Monday
- May 4th, 2026
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த பெண்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை...
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை நையப்புடைக்கப்பட்டதாக...
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து , வயது 80 என்ற முதியவரே உயிரிழந்தவர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி முதியவர் தனது மகனுடன்...
உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத்தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. தாம் விரும்பும் பாடசாலையை தெரிவுசெய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை...
அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க...
யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்....
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே எனவும் தமிழ் மக்கள் பிரிந்து நின்றால் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்துடன் சேர்ந்து பயணித்தபோதும் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று தெரிவித்துள்ள...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும்...
தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் சிறப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பின்வரும் கோரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியினால் இன்று நாட்டிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக்...
யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (வியாழக்கிழமை)...
யாழில் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண், நான்கு நாட்கள் கடந்த நிலையில் தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என பருத்தித்துறைத் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட்...
பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோரும் ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (11.06.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்....
தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றையதினம் (11.06.2020) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே...
யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் மிக நீண்டதாக ( 23″) அமையும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் அகலமாக (9″) அமையும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் கம்பஹா மாவட்டத்துக்கும் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் யாழ்ப்பாணம்...
பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலத்தில் நேற்று வியாழக்கிழமை...
வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இன்று வெள்ளிக்கிழமை முதல் வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில்...
பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை...
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதியானது. இந்திய புடவை வியாபாரியுடன் தொடர்புடைய 5 வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லையென்பது உறுதியானது. இதேவேளை, புடவை வியாபாரி உள்ளிட்ட குழுவினரை பேருந்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
