- Monday
- April 6th, 2026
வட மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தின் தலைவர் வை.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.வடமாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பில் சனிக்கிழமை யாழ். வர்த்தக சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பட்டுள்ளார். (more…)
அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். (more…)
யாழ். கல்வி வலயத்தின் மீள் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர் கோட்ட அலுவலகம், மற்றும் யாழ். கோட்ட கல்வி அலுவலகம் உட்பட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் என்பன நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்டன. (more…)
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சியளிக்கின்றன.குறிப்பாக பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாதைகளே இவ்வாறு கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காணப்படுகின்றன. (more…)
யாழ். போதனா வைத்தியசாலையில் விடுதிகளுக்கு வெளியே கட்டில்கள் இன்றி நோயாளிகள் தரையில் இருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.யாழ். குடாவில் தற்போது தொற்று நோய் மற்றும் தொற்றா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் வீதமும் அதிகரித்துள்ளது. (more…)
யாழ். நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.யாழ். நகரில் உள்ள ஹட்டன் நசனல் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து 73 ஆயிரத்து 208 ரூபா பெறுமதியான பொருட்கள் களாவாடப்பட்டுள்ளதாக (more…)
சட்டவிரோதமான முறையில் இழுவை மடியினைப் பாவித்த ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்ட்ட வழக்கில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி 89 ஆயிரம் ரூபா அபாராதம் விதித்ததுடன் பயன்படுத்தப்பட்ட வலைகளையும் எரித்து அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். (more…)
வடபகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. (more…)
வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், (more…)
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சிறுகுற்றம் புரிந்த 133பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி தெரிவித்தார்.இதன்போது, கடந்த வாரத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், அடிகாயம் ஏற்படுத்திய 33 பேரும், (more…)
பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.மிக வேகமாகச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் வீதிப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளன. (more…)
மணல் பிட்டிகளிலிருந்து அடி நிலத்தோடு மணல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள வளங்களைச் சுரண்டுவதில் அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் குறியாக இருக்கின்றார்களே தவிர, பிரதேச அபிவிருத்திக்கென எதனையும் செய்வதில்லை (more…)
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், (more…)
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
சாரதி பயிற்சி வழங்கும் போது வீதி ஒழுங்குமுறை மற்றும் வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு யாழ். பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் வியாழன் மாலை யாழ். பொது நூலகத்தில் நடத்தப்பட்டது. (more…)
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுகளின் ஒரு பாகமாக (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் என்பவரின் நல்லூரடியிலுள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. (more…)
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
