- Monday
- April 13th, 2026
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார் கொக்குத்தொடுவாய் மத்தியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளும் ஆண் பெண் போராளிகளின் சீருடைகள் சிலவும் வெளிவந்துள்ளது. இப்பகுதிக்கு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா...
முல்லைத்தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத் தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும்...
உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது. உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள...
.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில்,...
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை...
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்திரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன எனினும்...
புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் - புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்....
உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான...
வாக்னர் கூலிப்படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவ தலைவர்களை கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த இரகசிய சதித்திட்டத்தை பாதுகாப்புப்படையினர் முடக்கிவிட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாக்னர் கூலிப்படையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை...
அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையின் நவீனமயப்படுத்தல் காரணமாக குறித்த சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்த வரையிலான பகுதியின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த...
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார். அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு...
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது. இவ்வாறான சூழலில் இன்று...
ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் (29.06.2023)...
யாழ்ப்பாணம் - அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த, யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது...
முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயகலா மகேஸ்வரனுடன் வானில் பயணித்த மேலும் மூவர்...
உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது. இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும்...
யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும்...
அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள், பாரபட்சங்கள் காணப்படுவதாக குற்றம் சாட்டும் மக்கள், குறித்த பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவதற்கும் நிதி வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதுடன் குறித்த நிதி...
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கார் சாரதியே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர்...
Loading posts...
All posts loaded
No more posts
